Responsive image

தொண்டரடிப்பொடி_ஆழ்வார்

திருப்பள்ளியெழுச்சி 6

பாசுரம்
இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ?
      இறையவர் பதினொரு விடையரு மிவரோ?
மருவிய மயிலின னறுமுக னிவனோ?
      மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி,
புரவியோ டாடலும் பாடலும் தேரும்
      குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்,
அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ?
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (6)

பதம் பிரிக்கவும்
இரவியர் மணி நெடுந் தேரொடும் இவரோ ! 
இறையவர் பதினொரு விடையரும் இவரோ !
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ !
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம்
அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 6)

திருப்பள்ளியெழுச்சி 7

பாசுரம்
அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ?
      அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ?
இந்திர னானையும் தானும்வந் திவனோ?
      எம்பெரு மானுன் கோயிலின் வாசல்,
சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க
      இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ?
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (7)

பதம் பிரிக்கவும்
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ !
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவரோ !
எம்பெருமான் ! உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர்; திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை, மற்று இதுவோ !
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 7)

திருப்பள்ளியெழுச்சி 8

பாசுரம்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
      மாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா,
எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு
      ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,
தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ?
      தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி,
அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (8)

பதம் பிரிக்கவும்
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ !
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி;
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்;
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 8)

திருப்பள்ளியெழுச்சி 9

பாசுரம்
ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே
      யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
      கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,
மாதவர் வானவர் சாரண ரியக்கர்
      சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,
ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள
      அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (9)

பதம் பிரிக்கவும்
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி
யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
கந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்;
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 9)

திருப்பள்ளியெழுச்சி 10

பாசுரம்
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
      கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?
துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
      துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா,
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து
      தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடியென்னும்
அடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்-
      காட்படுத் தாய்.பள்ளி எழுந்தரு ளாயே. (10)

பதம் பிரிக்கவும்
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ !
கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ !
துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித்
துகில் உடுத்து ஏறினர், சூழ் புனல் அரங்கா !
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் ! பள்ளி எழுந்தருளாயே.
(திருப்பள்ளியெழுச்சி - 10)

Enter a number between 1 and 4000.