சிறிய_திருமடல்
சிறிய திருமடல் 43
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2715
பாசுரம்
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,
என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும், 3
சிறிய திருமடல் 44
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2716
பாசுரம்
என்னும் இவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத்
தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட 4
சிறிய திருமடல் 45
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2717
பாசுரம்
பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,
மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள், - அம்மறைதான் 5
சிறிய திருமடல் 46
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2718
பாசுரம்
மன்னும் அறம்பொருள் இன்பம்வீ டென்றுலகில்,
நன்னெறிமேம் பட்டன நான்கன்றே, - நான்கினிலும்
பின்னையது பின்னைப் பெயர்த்தரு மென்பது,ஓர்
தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும், 6
சிறிய திருமடல் 47
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2719
பாசுரம்
என்னும் இவையே _கர்ந்துடலம் தாம்வருந்தி,
துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும், - வெஞ்சுடரோன்
மன்னும் அழல்_கர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம் விட்டெழுந்து, 7
சிறிய திருமடல் 48
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2720
பாசுரம்
தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,
இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்,
என்னவும் கேட்டறிவ தில்லை - உளதென்னில்
மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள், 8
சிறிய திருமடல் 49
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2721
பாசுரம்
அன்னதோர் இல்லியி னூடுபோய், - வீடென்னும்
தொன்னெறிக்கட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே,
அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து,ஆங்
கன்னவரைக் கற்பிப்போம் யாமே?, - அதுநிற்க, 9
சிறிய திருமடல் 50
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
சிறிய_திருமடல்
பாசுர எண்: 2722
பாசுரம்
முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற,
அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,
பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர்
கொன்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர், 10