திருமங்கை_ஆழ்வார்
பெரிய திருமொழி 1
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 948
பாசுரம்
வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். (2) 1.1.1
பதம் பிரிக்கவும்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர் தரும் கல்வியே கருதி ஓடினேன்; ஓடி, உய்வதோர் பொருளால் உணர்வு என்னும் பெரும் பதம் தெரிந்து நாடினேன்; நாடி, நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.1)
பெரிய திருமொழி 2
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 949
பாசுரம்
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.2
பதம் பிரிக்கவும்
ஆவியே ! அமுதே ! என நினைந்து உருகி அவர் அவர் பணை முலை துணையாப்பாவியேன் உணராது, எத்தனை பகலும்பழுது போய் ஒழிந்தன நாள்கள்;தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும்சூழ் புனல் குடந்தையே தொழுது, என்நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.5)
பெரிய திருமொழி 3
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 950
பாசுரம்
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்
தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம்நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.3
பதம் பிரிக்கவும்
சேமமே வேண்டி தீவினை பெருக்கிதெரிவைமார் உருவமே மருவிஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்;காமனார் தாதை நம்முடை அடிகள்தம் அடைந்தார் மனத்து இருப்பார்நாமம் நான் உய்ய நான் kaNdukoNdEn நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.3)
பெரிய திருமொழி 4
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 951
பாசுரம்
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.4
பதம் பிரிக்கவும்
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கிவேல்கணார் கலவியே கருதிநின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்என் செய்கேன் ! நெடு விசும்பு அணவும்பன்றியாய் அன்று பாரகம் கீண்டபாழியான், ஆழியான் அருளேநன்று நான் உய்ய, நான் கண்டு konDEn நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.4)
பெரிய திருமொழி 5
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 952
பாசுரம்
கள்வனேனானேன்படிறுசெய்திருப்பேன்
கண்டவாதிரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன்செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத்திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம்கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.5
பதம் பிரிக்கவும்
கள்வனேன் ஆனேன்; படிறு செய்து இருப்பேன்;கண்டவா திரிதந்தேனேலும்,தெள்ளியேன் ஆனேன்; செல் கதிக்கு அமைந்தேன்;உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்;உடம்பு எலாம் கண்ண நீர் சோர,நள் இருள் அளவும் , பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.5)
பெரிய திருமொழி 6
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 953
பாசுரம்
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.6
பதம் பிரிக்கவும்
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்எனக்கு அரசு, என்னுடை வாழ்நாள், அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கிஅவர் உயிர் செகுத்த எம் அண்ணல்;வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி,நம்பிகாள் ! உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.6)
பெரிய திருமொழி 7
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 954
பாசுரம்
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்,
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம். 1.1.7
பதம் பிரிக்கவும்
இல் பிறப்பு அறியீர், இவர் அவர் என்னீர்,இன்னது ஓர் தன்மை என்று உணரீர்,கற்பகம் ! புலவர் களைகண் ! என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொல் பொருள் ஆளீர் ! சொல்லுகேன் வம்மின்;சூழ் புனல் குடந்தையே தொழுமின்;நல் பொருள் காண்மின்; பாடி நீர் உய்மின் நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.7)
பெரிய திருமொழி 8
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 955
பாசுரம்
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.8
பதம் பிரிக்கவும்
கற்றிலேன் கலைகள்; ஐம்புலன் கருதும்கருத்துளே திருத்தினேன் மனத்தை;பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை;பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்,செற்றமே வேண்டி திரி தருவேன்; தவிர்ந்தேன்;செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணிநல் துணையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.8)
பெரிய திருமொழி 9
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 956
பாசுரம்
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.9
பதம் பிரிக்கவும்
*குலம் தரும்; செல்வம் தந்திடும்; அடியார்படு துயர் ஆயின எல்லாம்நிலம் தரம் செய்யும்; neeL விசும்பு அருளும்;அருளொடு பெரு நிலம் அளிக்கும்;வலம் தரும்; மற்றும் தந்திடும் ; பெற்ற தாயினும்ஆயின செய்யும்;நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.9)
பெரிய திருமொழி 10
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 957
பாசுரம்
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார்வாள்ff கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்fமாலை
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.10
பதம் பிரிக்கவும்
*மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்மங்கையர் வாள் கலிகன்றிசெஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலைஇவை கொண்டு சிக்கென, தொண்டீர் !துஞ்சும் போது அழைமின்; துயர் வரில் நினைமின்;துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்,நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம்.(பெரிய திருமொழி 1.1.10)