பொய்கையாழ்வார்
முதல் திருவந்தாதி 1
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2082
பாசுரம்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று. 1
பதம் பிரிக்கவும்
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்,மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன்? அவன்,அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்,துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே!
முதல் திருவந்தாதி 2
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2083
பாசுரம்
என்று கடல்கடைந்த தெவ்வுலகம் நீரேற்றது,
ஒன்று மதனை யுணரேன் நான், - அன்று
தடைத்துடைத்துக் கண்படுத்த ஆழி, இதுநீ
படைத்திடந் துண்டுமிழ்ந்த பார். 2
முதல் திருவந்தாதி 3
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2084
பாசுரம்
பாரளவு மோரடிவைத் தோரடியும் பாருடுத்த,
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே - சூருருவில்
பேயளவு கண்ட பெருமான். அறிகிலேன்,
நீயளவு கண்ட நெறி. 3
முதல் திருவந்தாதி 4
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2085
பாசுரம்
நெறிவாசல் தானேயாய் நின்றானை, ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி, - அறிவானாம்
ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த,
ஆலமமர் கண்டத் தரன். 4
முதல் திருவந்தாதி 5
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2086
பாசுரம்
அரன்நா ரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்த்தி,
உரை_ல் மறையுறையும் கோயில், - வரைநீர்
கருமம் அழிப்பளிப்புக் கையதுவேல் நேமி,
உருவமெரி கார்மேனி ஒன்று. 5
முதல் திருவந்தாதி 6
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2087
பாசுரம்
ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனைநான்,
இன்று மறப்பனோ ஏழைகாள் - அன்று
கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை. 6
முதல் திருவந்தாதி 7
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2088
பாசுரம்
திசையும் திசையுறு தெய்வமும், தெய்வத்
திசையுங்க் கருமங்க ளெல்லாம் - அசைவில்சீர்க்
கண்ணன் நெடுமால் கடல்கடைந்த, காரோத
வண்ணன் படைத்த மயக்கு. 7
முதல் திருவந்தாதி 8
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2089
பாசுரம்
மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்
தியங்கும் எறிகதிரோன் றன்னை, - முயங்கமருள்
தோராழி யால் மறைத்த தென்நீ திருமாலே,
போராழிக் கையால் பொருது? 8
முதல் திருவந்தாதி 9
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2090
பாசுரம்
பொருகோட்டோ ர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, அன்றுன்
ஒருகோட்டின் மேல்கிடந்த தன்றெ, - விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துளங்க,
மாவடிவின் நீயளந்த மண்? 9
முதல் திருவந்தாதி 10
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2091
பாசுரம்
மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,
விண்ணும் விழுங்கியது மெய்யென்பர், - எண்ணில்
அலகளவு கண்டசீ ராழியாய்க்கு, அன்றிவ்
வுலகளவு முண்டோ வுன் வாய்? 10