Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி 1

பாசுர எண்: 2899

பாசுரம்
மறப்பும்ஞானமும் நானொன் றுணர்ந்திலன்,
மறக்குமென்றுசெந் தாமரைக்கண்ணொடு,
மறப்பற என்னுள்ளே மன்னினான் றன்னை,
மறப்பனோவினி யானென்மணியையே? 1.10.10

திருவாய்மொழி 2

பாசுர எண்: 2900

பாசுரம்
மணியைவானவர் கண்ணனைத்தன்னதோர்
அணியை, தென்குரு கூர்ச்சடகோபன், சொல்
பணிசெயாயிரத் துள்ளிவைபத்துடன்,
தணிவிலர் கற்ப ரேல்கல்விவாயுமே. 1.10.11

திருவாய்மொழி 3

பாசுர எண்: 2901

பாசுரம்
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1

திருவாய்மொழி 4

பாசுர எண்: 2902

பாசுரம்
கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. 2.1.2

திருவாய்மொழி 5

பாசுர எண்: 2903

பாசுரம்
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 2.1.3

திருவாய்மொழி 6

பாசுர எண்: 2904

பாசுரம்
கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல்,
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. 2.1.4

திருவாய்மொழி 7

பாசுர எண்: 2905

பாசுரம்
ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,
வாழியவானமே, நீயும fமதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. 2.1.5

திருவாய்மொழி 8

பாசுர எண்: 2906

பாசுரம்
நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. 2.1.6

திருவாய்மொழி 9

பாசுர எண்: 2907

பாசுரம்
தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம்
ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. 2.1.7

திருவாய்மொழி 10

பாசுர எண்: 2908

பாசுரம்
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால்,
உருளும்சகடம் உதைத்தபெருமானார்,
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. 2.1.8

Enter a number between 1 and 4000.