Responsive image

திருப்பாணாழ்வார்

அமலனாதிபிரான் 1

பாசுர எண்: 927

பாசுரம்
அமல னாதிபிரா னடியார்க்
      கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரை
      யார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன்,
      நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி
      னுள்ளன வொக்கின்றதே. (1)

பதம் பிரிக்கவும்

உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற* நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்* கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என சிந்தனையே !

அமலனாதிபிரான் 2

பாசுர எண்: 928

பாசுரம்
உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற,
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை,
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில்
அரங்கத் தம்மான், அரைச்
சிவந்த ஆடையின் மேல்சென்ற
      தாமென் சிந்தனையே. (2)

அமலனாதிபிரான் 3

பாசுர எண்: 929

பாசுரம்
மந்தி பாய்வட வேங்கட மாமலை, வானவர்கள்,
சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்,
அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல்
      அயனைப் படைத்த தோரெழில்
உந்தி மேலதன் றோஅடி
      யேனுள்ளத் தின்னுயிரே. (3)

பதம் பிரிக்கவும்

மந்தி பாய் வடவேங்கட மாமலை* வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்* அந்தி போல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்* உந்தி மேலது அன்றோ ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே !  

English

mandhi paay vada venkata maa malai vaanavargaL sandhi seyya ninRaan arangathu aravin aNaiyaan andhi pOl niRaththu aadaiyum adhan mEl ayanai padaithadhu Or ezhil undhi meladhu anRo ! adiyen uLLaththu innuyire !

Summary

He stands in the monkey forest of Venkatam hills over the North, worshipped by the celestials. He reclines on a serpent in Arangam. Over His sunset-red vesture, the beautiful lotus-seat of Brahma rises from His navel, captivating my heart and spirit !

அமலனாதிபிரான் 4

பாசுர எண்: 930

பாசுரம்
சதுரமா மதிள்சூழ் ழிலங்கைக்
      கிறைவன் தலைபத்து
உதிர வோட்டி,ஓர் வெங்கணை
      யுய்த்தவ னோத வண்ணன்
மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத்
      தம்மான்,திருவயிற்
றுதரபந் தனமென்
      னுள்ளத்துள்நின் றுலாகின்றதே. (4)

பதம் பிரிக்கவும்
சதுர மாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கண் உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மாவண்டு பாட மாமயில் ஆட அரங்கத்து அம்மான் திருவயிற்று
உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.
(அமலனாதிபிரான் - 4)

அமலனாதிபிரான் 5

பாசுர எண்: 931

பாசுரம்
பாரமாய பழவினை பற்றறுத்து, என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி
      யென்னுள் புகுந்தான்,
கோர மாதவம் செய்தனன்கொ லறியே
      னரங்கத் தம்மான்,திரு
வார மார்பதன் றோஅடி
      யேனை யாட்கோண்டதே. (5)

பதம் பிரிக்கவும்
பாரம் ஆய பழவினை பற்றறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்பு அதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
(அமலனாதிபிரான் - 5)

அமலனாதிபிரான் 6

பாசுர எண்: 932

பாசுரம்
துண்ட வெண்பிறை யான்துயர்
      தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன்
அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம்
      எழுமால்வரை, முற்றும்
உண்ட கண்டங்கண் டீரடி
      யேனை யுய்யக்கொண்டதே. (6)

பதம் பிரிக்கவும்
துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் ! அடியேனை உய்யக் கொண்டதே.
(அமலனாதிபிரான் - 6)

அமலனாதிபிரான் 7

பாசுர எண்: 933

பாசுரம்
கையி னார்சுரி சங்கன லாழியர், நீள்வரைபோல்
      மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனா ரரவி
      னணைமிசை மேய மாயனார்,
செய்யவா யையோ. என்னைச்
      சிந்தை கவர்ந்ததுவே. (7)

பதம் பிரிக்கவும்
கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணை மிசை மேய
மாயனார் செய்ய வாய், ஐயோ ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே !
(அமலனாதிபிரான் - 7)

அமலனாதிபிரான் 8

பாசுர எண்: 934

பாசுரம்
பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட, அமரர்க்கு
அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து,
கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து
      செவ்வரி யோடி, நீண்டவப்
பெரிய வாய கண்க
      ளென்னைப் பேதைமை செய்தனவே. (8)

பதம் பிரிக்கவும்
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே.
(அமலனாதிபிரான் - 8)

அமலனாதிபிரான் 9

பாசுர எண்: 935

பாசுரம்
ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய்,
ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான்,
கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்
      முடிவில்ல தோரெழில்
நீல மேனி யையோ.
      நிறை கொண்டதென் நெஞ்சினையே. (9)

பதம் பிரிக்கவும்
ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ ! நிறை கொண்டது என் நெஞ்சினையே.
(அமலனாதிபிரான் - 9)

அமலனாதிபிரான் 10

பாசுர எண்: 936

பாசுரம்
கொண்டல் வண்ணனைக்
      கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என்னுள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணாவே. (10)

பதம் பிரிக்கவும்
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே.
(அமலனாதிபிரான் - 10)

Enter a number between 1 and 4000.