முதல்_திருவந்தாதி
முதல் திருவந்தாதி 31
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2112
பாசுரம்
புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,
அரியுருவும் ஆளுருவுமாகி, - எரியுருவ
வண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால், மற்
றெண்ண்த்தா னாமோ இமை? 31
முதல் திருவந்தாதி 32
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2113
பாசுரம்
இமையாத கண்ணால் இருளகல நோக்கி,
அமையாப் பொறிபுலன்க ளைந்தும் - நமையாமல்,
ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்
நாகத் தணையான் நகர். 32
முதல் திருவந்தாதி 33
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2114
பாசுரம்
நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்
பகர மறைபயந்த பண்பன், - பெயரினையே
புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,
அந்தியா லாம்பனங் கென்? 33
முதல் திருவந்தாதி 34
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2115
பாசுரம்
என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்
முன்னொருவ னாய முகில்வண்ணா, - நின்னுருகிப்
பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலைதந்த ஆறு? 34
முதல் திருவந்தாதி 35
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2116
பாசுரம்
ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,
கூறிய குற்றமாக் கொள்ளல்நீ - தேறி,
நெடியோய். அடியடைதற் கன்றே,ஈ ரைந்து
முடியான் படைத்த முரண்? 35
முதல் திருவந்தாதி 36
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2117
பாசுரம்
முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்
தரணி தனதாகத் தானே - இரணியனைப்
புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ
மண்ணிரந்து கொண்ட வகை? 36
முதல் திருவந்தாதி 37
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2118
பாசுரம்
வகையறு _ண்கேள்வி வாய்வார்கள், நாளும்
புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, - திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்த வூர். 37
முதல் திருவந்தாதி 38
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2119
பாசுரம்
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,
பேர எறிந்த பெருமணியை, - காருடைய
மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்
என்னென்ற மால திடம். 38
முதல் திருவந்தாதி 39
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2120
பாசுரம்
இடந்தது பூமி எடுத்தது குன்றம்,
கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, - கிடந்ததுவும்
நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,
பேரோத வண்ணர் பெரிது. 39
முதல் திருவந்தாதி 40
அருளியவர்: பொய்கையாழ்வார்
முதல்_திருவந்தாதி
பாசுர எண்: 2121
பாசுரம்
பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ
வெருவிப் புனம்துறந்த வேழம், - இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்
கோன்வீழ கண்டுகந்தான் குன்று. 40