Responsive image

பெரிய_திருமொழி

பெரிய திருமொழி 1081

பாசுர எண்: 2028

பாசுரம்
வேம்பின்புழு வேம்பின்றி யுண்ணாது, அடியேன்
நான்பின்னு முன்சே வடியன்றி நயவேன்,
தேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப்
பாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ. (2) 11.8.7

பெரிய திருமொழி 1082

பாசுர எண்: 2029

பாசுரம்
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு,
மணியே. மணிமா ணிக்கமே. மதுசூதா,
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ. (2) 11.8.8

பெரிய திருமொழி 1083

பாசுர எண்: 2030

பாசுரம்
நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும்
எந்தாய். தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய்,
சந்தோகா. தலைவனே. தாமரைக் கண்ணா,
அந்தோ. அடியேற் கருளாயுன் னருளே (2) 11.8.9

பெரிய திருமொழி 1084

பாசுர எண்: 2031

பாசுரம்
குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை,
மன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதும்வல் லவர்த்தம்மேல்,
என்றும் வினையாயின சாரகில் லாவே (2) 11.8.10

Enter a number between 1 and 4000.