பெரிய_திருமடல்
பெரிய திருமடல் 21
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2770
பாசுரம்
என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை,
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்
பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை, 58
பெரிய திருமடல் 22
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2771
பாசுரம்
மன்னும் அரங்கத்தெம் மாமணியை, - வல்லவாழ்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை,
தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை, 59
பெரிய திருமடல் 23
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2772
பாசுரம்
மன்னும் கடன்மல்லை மாயவனை, - வானவர்தம்
சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை,
தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,
அன்னத்தை மீனை அரியை அருமறையை, 60
பெரிய திருமடல் 24
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2773
பாசுரம்
முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, - கோவலூர்
மன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப்,
பின்னும் முலையுண்ட பிள்ளையை, - அள்ளல்வாய்
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை, 61
பெரிய திருமடல் 25
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2774
பாசுரம்
தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை, -
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை,
மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,
கொன்னவிலும் ஆழிப் படையானை, - கோட்டியூர் 62
பெரிய திருமடல் 26
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2775
பாசுரம்
அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை,
மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை,
மன்னிய பாடகத்தெம் மைந்தனை, - வெஃகாவில், 63
பெரிய திருமடல் 27
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2776
பாசுரம்
உன்னிய யோகத் துறக்கத்தை, ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை,
என்னை மனங்கவர்ந்த ஈசனை, - வானவர்த்தம்
முன்னவனை மூழிக் களத்து விளக்கினை, 64
பெரிய திருமடல் 28
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2777
பாசுரம்
அன்னவனை ஆதனூர் ஆண்டாளக்கும் ஐயனை,
நென்னலை யின்றினை நாளையை, - நீர்மலைமேல்
மன்னும் மறைநான்கும் ஆனானை, புல்லாணித்
தென்னன் தமிழி வடமொழியை, நாங்கூரில் 65
பெரிய திருமடல் 29
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2778
பாசுரம்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை,
நன்னீர்த் தலைச்சங்க நான்மதியை, - நான்வணங்கும்
கண்ணனைக் கண்ண புரத்தானை, தென்னறையூர்
மன்னும் மணிமாடக் கோயில் மணாளனை, 66
பெரிய திருமடல் 30
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2779
பாசுரம்
கன்னவில்தோள் காளையைக் கண்டாங்குக் கைதொழுது
என்னிலைமை யெல்லாம் அறிவித்தால் எம்பெருமான்,
தன்னருளும் ஆகமும் தாரானேல், - தன்னைநான்
மின்னிடையார் சேரியிலும் வேதியர்க்கள் வாழ்விடத்தும், 67