பெரிய_திருமடல்
பெரிய திருமடல் 141
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2890
பாசுரம்
பொருமாநீள்படை யாழிசங்கத்தொடு,
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ,
ஒருமாணிக்குற ளாகிநிமிர்ந்த, அக்
கருமாணிக்கமென் கண்ணுளதாகுமே. 1.10.1
பெரிய திருமடல் 142
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2891
பாசுரம்
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால்தொழில்,
எண்ணிலும்வரு மென்னினிவேண்டுவம்,
மண்ணும்நீரு மெரியும்நல்வாயுவும்,
விண்ணுமாய்விரியு மெம்பிரானையே. 1.10.2
பெரிய திருமடல் 143
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2892
பாசுரம்
எம்பிரானையெந்தை தந்தைதந்தைக்கும்
தம்பிரானை, தண்தாமரைக்கண்ணனை,
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை,
எம்பிரானைத் தொழாய்மடநெஞ்சமே. 1.10.3
பெரிய திருமடல் 144
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2893
பாசுரம்
நெஞ்சமேநல்லை நல்லை,உன்னைப்பெற்றால்
என்செய்யோம், இனியென்னகுறைவினம்?
மைந்தனை மலராள்மணவாளனை,
துஞ்சும்போதும் விடாதுதொடர்க்கண்டாய். 1.10.4
பெரிய திருமடல் 145
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2894
பாசுரம்
கண்டாயேநெஞ்சே கருமங்கள்வாய்க்கின்று, ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு,
உண்டானையுலகேழு மோர்மூவடி
கொண்டானை, கண்டு கொண்டனைநீயுமே. 1.10.5
பெரிய திருமடல் 146
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2895
பாசுரம்
நீயும்நானுமிந் நேர்நிற்கில், மேல்மற்றோர்,
நோயும்சார்க்கொடான் நெஞ்சமே, சொன்னேன்,
தாயும்தந்தையுமா யிவ்வுலகினில்,
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே. 1.10.6
பெரிய திருமடல் 147
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2896
பாசுரம்
எந்தையேயென்று மெம்பெருமானென்றும்,
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன்,
எந்தையெம்பெருமானென்று வானவர்,
சிந்தையுள் வைத்துச் சொல்லும்செல்வனையே. 1.10.7
பெரிய திருமடல் 148
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2897
பாசுரம்
செல்வநாரண னென்றசொல்கேட்டலும்,
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே,
அல்லும்நன்பகலு மிடைவீடின்றி,
நல்கியென்னை விடான்நம்பி நம்பியே. 1.10.8
பெரிய திருமடல் 149
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமடல்
பாசுர எண்: 2898
பாசுரம்
நம்பியைத்தென் குறுங்குடிநின்ற, அச்
செம்பொனேதிக ழும்திருமூர்த்தியை,
உம்பர்வானவ ராதியஞ்சோதியை,
எம்பிரானையென் சொல்லிமறப்பனோ. 1.10.9