பெரியாழ்வார்_திருமொழி
பெரியாழ்வார் திருமொழி 21
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 33
பாசுரம்
நாள்களோர்நாலைந்து திங்களளவிலே
தாளைநிமிர்த்துச் சகடத்தைச்சாடிப்போய்
வாள்கொள்வளையெயிற்று ஆருயிர்வவ்வினான்
தோள்கள்இருந்தவாகாணீரே
சுரிகுழலீர். வந்துகாணீரே. 11.
பெரியாழ்வார் திருமொழி 22
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 34
பாசுரம்
மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்ற
செய்த்தலைநீலநிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலைநேமியும் சங்கும்நிலாவிய
கைத்தலங்கள்வந்துகாணீரே
கனங்குழையீர். வந்துகாணீரே. 12.
பெரியாழ்வார் திருமொழி 23
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 35
பாசுரம்
வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக்குட்டற்கு
அண்டமும்நாடும் அடங்கவிழுங்கிய
கண்டம்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே. 13.
பெரியாழ்வார் திருமொழி 24
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 36
பாசுரம்
எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டு
அந்தொண்டைவாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டைவாயால் தருக்கிப்பருகும் இச்
செந்தொண்டைவாய்வந்துகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 14.
பெரியாழ்வார் திருமொழி 25
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 37
பாசுரம்
நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்
நாக்குவழித்து நீராட்டும்இந்நம்பிக்கு
வாக்கும்நயனமும் வாயும்முறுவலும்
மூக்கும்இருந்தவாகாணீரே
மொய்குழலீர். வந்துகாணீரே. 15.
பெரியாழ்வார் திருமொழி 26
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 38
பாசுரம்
விண்கொளமரர்கள் வேதனைதீர முன்
மண்கொள்வசுதேவர்தம் மகனாய்வந்து
திண்கொளசுரரைத் தேயவளர்கின்றான்
கண்கள்இருந்தவாகாணீரே
கனவளையீர். வந்துகாணீரே. 16.
பெரியாழ்வார் திருமொழி 27
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 39
பாசுரம்
பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய
திருவின்வடிவொக்கும் தேவகிபெற்ற
உருவுகரிய ஒளிமணிவண்ணன்
புருவம்இருந்தவாகாணீரே
பூண்முலையீர். வந்துகாணீரே. 17.
பெரியாழ்வார் திருமொழி 28
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 40
பாசுரம்
மண்ணும்மலையும் கடலும்உலகேழும்
உண்ணுந்திறத்து மகிழ்ந்துண்ணும்பிள்ளைக்கு
வண்ணமெழில்கொள் மகரக்குழையிவை
திண்ணம்இருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 18.
பெரியாழ்வார் திருமொழி 29
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 41
பாசுரம்
முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்
சிற்றிலிழைத்துத் திரிதருவோர்களை
பற்றிப்பறித்துக்கொண்டு ஓடும்பரமன்தன்
நெற்றிஇருந்தவாகாணீரே
நேரிழையீர். வந்துகாணீரே. 19.
பெரியாழ்வார் திருமொழி 30
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 42
பாசுரம்
அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டு
கழல்கள்சதங்கை கலந்துஎங்குமார்ப்ப
மழகன்றினங்கள் மறித்துத்திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 20.