Responsive image

பெரியாழ்வார்_திருமொழி

பெரியாழ்வார் திருமொழி 11

பாசுரம்
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே.        1.

பெரியாழ்வார் திருமொழி 12

பாசுரம்
முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்துவிரலும் மணிவண்ணன்பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே
ஒண்ணுதலீர். வந்துகாணீரே.        2.

பெரியாழ்வார் திருமொழி 13

பாசுரம்
பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கை
அணைத்தாரஉண்டு கிடந்தஇப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளைநின்றிலங்கும்
கணைக்கால்இருந்தவாகாணீரே
காரிகையீர். வந்துகாணீரே.        3.

பெரியாழ்வார் திருமொழி 14

பாசுரம்
உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ண
இழந்தாளெரிவினாலீர்த்து எழில்மத்தின்
பழந்தாம்பாலோச்சப் பயத்தால்தவழ்ந்தான்
முழந்தாள்இருந்தவாகாணீரே
முகிழ்முலையீர். வந்துகாணீரே.        4.

பெரியாழ்வார் திருமொழி 15

பாசுரம்
பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.

பெரியாழ்வார் திருமொழி 16

பாசுரம்
மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே. 6.

பெரியாழ்வார் திருமொழி 17

பாசுரம்
இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனை
பருங்கிப்பறித்துக்கொண்டு ஓடுபரமன்தன்
நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே
வாணுதலீர். வந்துகாணீரே. 7.

பெரியாழ்வார் திருமொழி 18

பாசுரம்
வந்தமதலைக்குழாத்தை வலிசெய்து
தந்தக்களிறுபோல் தானேவிளையாடும்
நந்தன்மதலைக்கு நன்றுமழகிய
உந்திஇருந்தவாகாணீரே
ஒளியிழையீர். வந்துகாணீரே. 8.

பெரியாழ்வார் திருமொழி 19

பாசுரம்
அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சி
மதுரமுலையூட்டி வஞ்சித்துவைத்த
பதரப்படாமே பழந்தாம்பாலார்த்த
உதரம்இருந்தவா காணீரே
ஒளிவளையீர். வந்துகாணீரே. 9.

பெரியாழ்வார் திருமொழி 20

பாசுரம்
பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்கு
இருமாமருதம் இறுத்தஇப்பிள்ளை
குருமாமணிப்பூண் குலாவித்திகழும்
திருமார்புஇருந்தவாகாணீரே
சேயிழையீர். வந்துகாணீரே. 10.

Enter a number between 1 and 4000.