பெரியாழ்வார்
பெரியாழ்வார் திருமொழி 459
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 471
பாசுரம்
பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில்வாழவல்ல மாயமணாளநம்பீ.
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்று
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்குஉரித்தாக்கினையே. (2) 9.
பெரியாழ்வார் திருமொழி 460
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 472
பாசுரம்
தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்
சுடரொளியாய்நெஞ்சினுள்ளே தோன்றும்என்சோதிநம்பி.
வடதடமும்வைகுந்தமும் மதிள்துவராபதியும்
இடவகைகள்இகழ்ந்திட்டு என்பால்இடவகைகொண்டனையே. (2) 10.
பெரியாழ்வார் திருமொழி 461
அருளியவர்: பெரியாழ்வார்
பெரியாழ்வார்_திருமொழி
பாசுர எண்: 473
பாசுரம்
வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தே
கோயில்கொண்டகோவலனைக் கொழுங்குளிர்முகில்வண்ணனை
ஆயரேற்றைஅமரர்கோவை அந்தணர்தமமுதத்தினை
சாயைபோலப்பாடவல்லார்தாமும் அணுக்கர்களே. (2) 11.