தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை 32
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 903
பாசுரம்
ஆர்த்துவண் டலம்பும் சோலை
அணிதிரு வரங்கந் தன்னுள்,
கார்த்திர ளனைய மேனிக்
கண்ணனே. உன்னைக் காணும்,
மார்க்கமொ றறிய மாட்டா
மனிசரில் துரிச னாய,
மூர்க்கனேன் வந்து நின்றேன்,
மூர்க்கனேன் மூர்க்க னேனே. (32)
திருமாலை 33
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 904
பாசுரம்
மெய்யெல்லாம் போக விட்டு
விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட
போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.உன்
அருளென்னு மாசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன்
பொய்யனேன் பொய்ய னேனே. (33)
திருமாலை 34
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 905
பாசுரம்
உள்ளத்தே யுறையும் மாலை
உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்
உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான்
விலவறச் சிரித்திட் டேனே. (34)
திருமாலை 35
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 906
பாசுரம்
தாவியன் றுலக மெல்லாம்
தலைவிளாக் கொண்ட எந்தாய்,
சேவியே னுன்னை யல்லால்
சிக்கெனச் செங்கண் மாலே,
ஆவியே.அமுதே என்றன்
ஆருயி ரனைய எந்தாய்,
பாவியே னுன்னை யல்லால்
பாவியேன் பாவி யேனே. (35)
திருமாலை 36
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 907
பாசுரம்
மழைக்கன்று வரைமு னேந்தும்
மைந்தனே.மதுர வாறே,
உழைக்கன்றே போல நோக்கம்
உடையவர் வலையுள் பட்டு,
உழைக்கின்றேற் கென்னை நோக்கா
தொழிவதே,உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி.
அரங்கமா நகரு ளானே. (36)
திருமாலை 37
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 908
பாசுரம்
தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்
திருவரங்கங் கத்துள் ளோங்கும்,
ஒளியுளார் தாமே யன்றே
தந்தையும் தாயு மாவார்,
எளியதோ ரருளு மன்றே
எந்திறத் தெம்பி ரானார்,
அளியன்நம் பையல் என்னார்
அம்மவோ கொடிய வாறே. (37)
திருமாலை 38
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 909
பாசுரம்
மேம்பொருள் போக விட்டு
மெய்ம்மையை மிகவு ணர்ந்து,
ஆம்பரி சறிந்து கொண்டு
ஐம்புல னகத்த டக்கி,
காம்புறத் தலைசி ரைத்துன்
கடைத்தலை யிருந்து,வாழும்
சோம்பரை உகத்தி போலும்
சூழ்புனல் அரங்கத் தானே. (38)
திருமாலை 39
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 910
பாசுரம்
அடிமையில் குடிமை யில்லா
அயல்சதுப் பேதி மாரில்,
குடிமையில் கடைமை பட்ட
குக்கரில் பிறப்ப ரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்.
மொய்கழற் கன்பு செய்யும்,
அடியரை யுகத்தி போலும்
அரங்கமா நகரு ளானே. (39)
திருமாலை 40
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 911
பாசுரம்
திருமறு மார்வ.நின்னைச்
சிந்தையுள் திகழ வைத்து,
மருவிய மனத்த ராகில்
மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெருவரக் கொன்று சுட்டிட்
டீட்டிய வினைய ரேலும்,
அருவினைப் பயன துய்யார்
அரங்கமா நகரு ளானே. (40)
912:
வானுளா ரறிய லாகா
வானவா. என்ப ராகில்,
தேனுலாந் துளப மாலைச்
சென்னியாய். என்ப ராகில்,
ஊனமா யினகள் செய்யும்
ஊனகா ரகர்க ளேலும்,
போனகம் செய்த சேடம்
தருவரேல் புனித மன்றே? (41)