திருவாய்மொழி
திருவாய்மொழி 41
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2939
பாசுரம்
தகவுடையவனே யென்னும், பின்னும்
மிகவிரும்பும்பிரான் என்னும், என
தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே. 2.4.6
திருவாய்மொழி 42
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2940
பாசுரம்
உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என
வள்ளலேகண்ணனேயென்னும், பின்னும்
வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்
கள்விதான்பட்ட வஞ்சனையே. 2.4.7
திருவாய்மொழி 43
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2941
பாசுரம்
வஞ்சனே, என்னும் கைதொழும், தன்
நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல்
கஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத்
தஞ்சமென்றிவள் பட்டனவே. 2.4.8
திருவாய்மொழி 44
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2942
பாசுரம்
பட்டபோதெழு போதறியாள், விரை
மட்டலர்தண்துழாய் என்னும், சுடர்
வட்டவாய்நுதி நேமியீர், நும
திட்டமென்கொ லிவ்வேழைக்கே. 2.4.9
திருவாய்மொழி 45
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2943
பாசுரம்
ஏழைபேதை யிராப்பகல், தன
கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்
வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்
மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே. 2.4.10
திருவாய்மொழி 46
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2944
பாசுரம்
வாட்டமில்புகழ் வாமனனை, இசை
கூட்டிவண்சடகோபன் சொல், அமை
பாட்டோ ராயிரத்திப் பத்தால், அடி
குட்டலாகு மந்தாமமே. 2.4.11
திருவாய்மொழி 47
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2945
பாசுரம்
அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,
அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,
செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே. 2.5.1
திருவாய்மொழி 48
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2946
பாசுரம்
திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே. 2.5.2
திருவாய்மொழி 49
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2947
பாசுரம்
என்னுள்கலந்தவன் செங்கனிவாய்செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள்கலவாத தெப்பொருளும்தானிலையே. 2.5.3
திருவாய்மொழி 50
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2948
பாசுரம்
எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே. 2.5.4