திருவாய்மொழி
திருவாய்மொழி 31
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2929
பாசுரம்
முன்நல்யாழ்பயில் நூல் நரம்பின்முதிர்சுவையே,
பன்னலார்பயிலும் பரனே,பவித்திரனே,
கன்னலே,அமுதே, கார்முகிலே,என்கண்ணா,
நின்னலாலிலேன்கா ணென்னைநீகுறிக்கொள்ளே. 2.3.7
திருவாய்மொழி 32
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2930
பாசுரம்
குறிக்கொள்ஞானங்களா லெனையூழிசெய்தவமும்,
கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன்யான்,
உறிக்கொண்டவெண்ணெய்பா லொளித்துண்ணுமம்மான்பின்,
நெறிக்கொண்டநெஞ்சனாய்ப் பிறவித்துயர்க்கடிந்தே. 2.3.8
திருவாய்மொழி 33
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2931
பாசுரம்
கடிவார்தண்ணந்துழாய்க் கண்ணன்விண்ணவர்பெருமான்,
படிவான்மிறந்த பரமன்பவித்திரன்சீர்,
செடியார்நோய்கள்கெடப் படிந்துகுடைந்தாடி,
அடியேன்வாய்மடுத்துப் பருகிக்களித்தேனே. 2.3.9
திருவாய்மொழி 34
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2932
பாசுரம்
களிப்பும்கவர்வுமற்றுப் பிறப்புப்பிணிமூப்பிறப்பற்று,
ஒளிக்கொண்டசோதியுமா யுடன்கூடுவதென்றுகொலோ,
துளிக்கின்றவானிந்நிலம் சுடராழிசங்கேந்தி,
அளிக்கின்றமாயப்பிரானடியார்கள்குழாங்களையே. 2.3.10
திருவாய்மொழி 35
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2933
பாசுரம்
குழாங்கொள்பேரரக்கன் குலம்வீயமுனிந்தவனை,
குழாங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த,
குழாங்கொளாயிரத்து ளிவைபத்துமுடன்பாடி,
குழாங்களாயடியீருடன் கூடிநின்றாடுமினே. 2.3.11
திருவாய்மொழி 36
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2934
பாசுரம்
ஆடியாடி யகம்கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்காவென்று,
வாடிவாடு மிவ்வாணுதலெ. 2.4.1
திருவாய்மொழி 37
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2935
பாசுரம்
வாணுதலிம்மடவரல், உம்மைக்
காணுமாசையுள் நைகின்றாள், விறல்
வாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக்
காண நீரிரக்கமிலீரே. 2.4.2
திருவாய்மொழி 38
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2936
பாசுரம்
இரக்கமனத்தோ டெரியணை,
அரக்குமெழுகு மொக்குமிவள்,
இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,
அரக்கனிலங்கை செற்றீருக்கே. 2.4.3
திருவாய்மொழி 39
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2937
பாசுரம்
இலங்கைசெற்றவனே, என்னும், பின்னும்
வலங்கொள்புள்ளுயர்த்தாய் என்னும், உள்ளம்
மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக்கைதொழும் நின்றிவளே. 2.4.4
திருவாய்மொழி 40
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2938
பாசுரம்
இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன
குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு
திவளும்தண்ணந் துழாய்கொடீர், என
தவளவண்ணர் தகவுகளே. 2.4.5