Responsive image

திருவாய்மொழி

திருவாய்மொழி 21

பாசுர எண்: 2919

பாசுரம்
கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,
வருத்தித்தமாயப் பிரானையன்றி, ஆரே
திருத்தித்திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக்காக்கு மியல்வினரே. 2.2.8

திருவாய்மொழி 22

பாசுர எண்: 2920

பாசுரம்
காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே. 2.2.9

திருவாய்மொழி 23

பாசுர எண்: 2921

பாசுரம்
கள்வா எம்மையு மேழுலகும், நின்
னுள்ளேதோற்றிய இறைவா. என்று,
வெள்ளேறன்நான்முக னிந்திரன்வானவர்,
புள்ளூர்திகழல் பணிந்தேத்துவரே. 2.2.10

திருவாய்மொழி 24

பாசுர எண்: 2922

பாசுரம்
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்
கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,
வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,
ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. 2.2.11

திருவாய்மொழி 25

பாசுர எண்: 2923

பாசுரம்
ஊனில்வாழுயிரே நல்லைபோஉன்னைப்பெற்று,
வானுளார்பெருமான் மதுசூதனென்னம்மான்,
தானும்யானுமெல்லாம் தன்னுள்ளேகலந்தொழிந்தோம்,
தேனும்பாலும்நெய்யும் கன்னலுமமுதுமொத்தே. 2.3.1

திருவாய்மொழி 26

பாசுர எண்: 2924

பாசுரம்
ஒத்தார்மிக்காரை இலையாயமாமாய,
ஒத்தாயெப்பொருட்கு முயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய்த்தந்தையா யறியாதனவறிவித்த,
அத்தா, நீசெய்தன அடியேனறியேனே. 2.3.2

திருவாய்மொழி 27

பாசுர எண்: 2925

பாசுரம்
அறியாக்காலத்துள்ளே யடிமைக்கணன்புசெய்வித்து,
அறியாமாமாயத் தடியேனைவைத்தாயால்,
அறியாமைக்குறளாய் நிலம்மாவலிமூவடியென்று,
அறியாமைவஞ்சித்தா யெனதாவியுள்கலந்தே. 2.3.3

திருவாய்மொழி 28

பாசுர எண்: 2926

பாசுரம்
எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவிக்கைம்மாறு,
எனதாவிதந்தொழிந்தே னினிமீள்வதென்பதுண்டே,
எனதாவியாவியும்நீ பொழிலேழுமுண்டவெந்தாய்,
எனதாவியார?fயானார?f தந்தநீகொண்டாக்கினையே. 2.3.4

திருவாய்மொழி 29

பாசுர எண்: 2927

பாசுரம்
இனியார்ஞானங்களா லெடுக்கலெழாதவெந்தாய்,
கனிவார்வீட்டின்பமே யென்கடற்படாவமுதே,
தனியேன்வாழ்முதலே, பொழிலேழுமேனமொன்றாய்,
நுனியார்க்கோட்டில்வைத்தா யுன்பாதம்சேர்ந்தேனே. 2.3.5

திருவாய்மொழி 30

பாசுர எண்: 2928

பாசுரம்
சேர்ந்தார்தீவினைகட் கருநஞ்சைத்திண்மதியை,
தீர்ந்தார்தம்மனத்துப் பிரியாதவருயிரை,
சோர்ந்தேபோகல்கொடாச் சுடரை அரக்கியைமூக்
கீர்ந்தாயை, அடியேனடைந்தேன் முதல்முன்னமே. 2.3.6

Enter a number between 1 and 4000.