திருவாய்மொழி
திருவாய்மொழி 11
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2909
பாசுரம்
நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்,
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்,
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. 2.1.9
திருவாய்மொழி 12
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2910
பாசுரம்
வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 2.1.10
திருவாய்மொழி 13
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2911
பாசுரம்
சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்,
ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும்,
சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. 2.1.11
திருவாய்மொழி 14
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2912
பாசுரம்
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட, நங்f
கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே. 2.2.1
திருவாய்மொழி 15
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2913
பாசுரம்
ஏபாவம்,பரமே, யேழுலகும்,
ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,
கோபாலகோளரி யேறன்றியே. 2.2.2
திருவாய்மொழி 16
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2914
பாசுரம்
ஏறனைப்பூவனைப் பூமகள்தன்னை,
வேறின்றிவிண்தொழத் தன்னுள்வைத்து,
மேல்தன்னைமீதிட நிமிர்ந்துமண்கொண்ட,
மால்தனில்மிக்குமோர் தேவுமுளதே. 2.2.3
திருவாய்மொழி 17
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2915
பாசுரம்
தேவுமெப் பொருளும்படைக்க,
பூவில்நான் முகனைப்படைத்த,
தேவனெம் பெருமானுக்கல்லால்,
பூவும்பூசனையும் தகுமே. 2.2.4
திருவாய்மொழி 18
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2916
பாசுரம்
தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,
மிகும்தேவு மெப்பொருளும்படைக்க,
தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,
மிகும்சோதி மேலறிவார்யவரே. 2.2.5
திருவாய்மொழி 19
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2917
பாசுரம்
யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளியாரே. 2.2.6
திருவாய்மொழி 20
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 2918
பாசுரம்
பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,
வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,
உள்ளுளா ரறிவார் அவன்றன்,
கள்ளமாய மனக்கருத்தே. 2.2.7