திருமாலை
திருமாலை 42
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 913
பாசுரம்
அமரவோ ரங்க மாறும்
வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய
சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில்
நொடிப்பதோ ரளவில், ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும்
அரங்கமா நகரு ளானே. (43)
திருமாலை 44
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 915
பாசுரம்
பெண்ணுலாம் சடையி னானும்
பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
களைகணாக் கருது மாறே. (44)
திருமாலை 45
அருளியவர்: தொண்டரடிப்பொடி_ஆழ்வார்
திருமாலை
பாசுர எண்: 916
பாசுரம்
வளவெழும் தவள மாட
மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை கொன்ற
கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த்
தொண்டர டிப்பொ டிசொல்,
இளையபுன் கவிதை யேலும்
எம்பிறார் கினிய வாறே. (45)