பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

நுகர்ச்சி உறுமோ ? மூவுலகின் வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர்ச் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மாப் புகழே.
(திருவாய்மொழி - 8.10.6)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக்கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே.
(திருவாய்மொழி - 8.10.7)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பலபரப்பி
நீளும் படர் பூங் கற்பகக் காவும் நிறை பல் ஞாயிற்றின்
கோளும் உடைய மணி மலைப் போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே.
(திருவாய்மொழி - 8.10.8)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி, சங்கு, வாள், வில், தண்டு ஆதி பல் படையன்
குமரன், கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே.
(திருவாய்மொழி - 8.10.9)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

வாய்க்க தமியேற்கு ஊழிதோறு ஊழி ஊழி மா காயாம்
பூக்கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள்; அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே.
(திருவாய்மொழி - 8.10.10)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர், கொண்ட பெண்டிர் மக்களே.
(திருவாய்மொழி - 8.10.11)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 2082
திருவாய்மொழி : 1

உயர்வற உயர்நலம் உடையவன் எவன் ? அவன்*
மயர்வற மதிநலம் அருளினன் எவன் ? அவன்*
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் ? அவன்*
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே !

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன்,

மயர்வு அற மதி-நலம் அருளினன் எவன்? அவன்,
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன்,
துயர் அறு சுடர்  அடி தொழுது எழு என் மனனே!

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

மனம் அகம் மலர் அற மலர் மிசை எழுதரும்

மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவை இலன்;
இனன் உணர், முழுணஙநலம், எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன், எனன் உயிர், மிகுநரை இலனே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

இலன் அது, உடையன் இது; என நினைவு அரியவன்;

நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்;
புலனோடு புலன் அலன், ஒழிவு இலன்; பரந்த அந்
நலன் உடை ஒருவனை நணுகினும் நாமே.

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

நாம் அவன் இவன் உவன், அவள் இவள் உவள் எவள்,

தாம் அவர் இவர் உவர், அது இது உது எது,
வீம் அவை இவை உவை, அவை நலம், தீங்கு அவை,
ஆம் அவை, ஆயவை, ஆய் நின்ற அவரே.

Get in touch

தொடர்பு கொள்ள

STD PATHASALA TRUST,
170, SANNIDHI STREET,
SADAGOPAN NAGAR,
JALLADAMPET,
CHENNAI - 600100

திவ்ய பிரபந்த பாடசாலையைத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை,
1/170, சந்நிதி தெரு, சடகோபன் நகர்,
ஜல்லடம்பேட்டை,
சென்னை – 600 100

Email: pathasala.services@gmail.com
Ph: +91 44 22462436, 22460008
Mobile: +91 99529 60527, +91 9940672520

கோயிலுக்கு வரும் வழி:
பள்ளிக்கரணை வரும் பேருந்துகளை அறிய இங்கே பார்க்கவும்.
பேருந்தில் வருவோர் இறங்க வேண்டிய நிறுத்தம் – “பள்ளிக்கரணை ஆயில் மில்” (Pallikaranai Oil Mill).
“பள்ளிக்கரணை ஆயில் மில்” பேருந்து நிலையத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வழி கீழே உள்ளது.
“பள்ளிக்கரணை ஆயில் மில்” நிறுத்தத்தை அடைய விரிவான வழி விளக்கத்திற்கு கூகுள் வரைப்படம் இங்கே.