பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி 31
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2312
பாசுரம்
இவையவன் கோயில் இரணியன தாகம்,
அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்
பாகத்தான் பாற்கடலு ளான். 31
மூன்றாம் திருவந்தாதி 32
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2313
பாசுரம்
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
_ற்கடலும் _ண்ணுல தாமரைமேல், - பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்தொசித்த கோபா லகன். 32
மூன்றாம் திருவந்தாதி 33
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2314
பாசுரம்
பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. 33
மூன்றாம் திருவந்தாதி 34
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2315
பாசுரம்
அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே. காண். 34
மூன்றாம் திருவந்தாதி 35
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2316
பாசுரம்
காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை. 35
மூன்றாம் திருவந்தாதி 36
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2317
பாசுரம்
கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய
படைபரவ பாழி பனிநீ ருலகம்,
அடியளந்த மாயன் அவற்கு. 36
மூன்றாம் திருவந்தாதி 37
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2318
பாசுரம்
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,
திகழும் திருமார்வன் தான். 37
மூன்றாம் திருவந்தாதி 38
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2319
பாசுரம்
தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,
தானே தவவுருவும் தாரகையும், - தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இறை. 38
மூன்றாம் திருவந்தாதி 39
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2320
பாசுரம்
இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன். 39
மூன்றாம் திருவந்தாதி 40
அருளியவர்: பேயாழ்வார்
மூன்றாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2321
பாசுரம்
உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,
மண்ணெடுங்கத் தானளந்த மன். 40