பெரிய_திருவந்தாதி
பெரிய திருவந்தாதி 81
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2665
பாசுரம்
பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என் றோரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து.
பெரிய திருவந்தாதி 82
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2666
பாசுரம்
தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்ந்து.
பெரிய திருவந்தாதி 83
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2667
பாசுரம்
அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய், செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன்
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
பெரிய திருவந்தாதி 84
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2668
பாசுரம்
வாழ்த்தி அவனடியைய்ப் பூப்புனைந்து, நிந்தலையைத்
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,
தங்கத்தா னாமேலும் தங்கு.
பெரிய திருவந்தாதி 85
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2669
பாசுரம்
தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்?
பெரிய திருவந்தாதி 86
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2670
பாசுரம்
கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது?
பெரிய திருவந்தாதி 87
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2671
பாசுரம்
இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல்.