பெரிய_திருவந்தாதி
பெரிய திருவந்தாதி 41
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2625
பாசுரம்
வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
பன்னாளும் நிற்குமிப் பார்.
பெரிய திருவந்தாதி 42
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2626
பாசுரம்
பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,-பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு
ஆவான் பூகாவால் அவை.
பெரிய திருவந்தாதி 43
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2627
பாசுரம்
அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ ,
மனத்துயரை மாய்க்கும் வகை?
பெரிய திருவந்தாதி 44
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2628
பாசுரம்
வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,
மேலைத்தாம் செய்யும் வினை?
பெரிய திருவந்தாதி 45
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2629
பாசுரம்
வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,
தினையாம் சிறிதளவும் செல்ல-நினையாது
வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,
நாயகத்தான் பொன்னடிகள் நான்.
பெரிய திருவந்தாதி 46
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2630
பாசுரம்
நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
நீகதியா நெஞ்சே. நினை.
பெரிய திருவந்தாதி 47
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2631
பாசுரம்
நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு?
பெரிய திருவந்தாதி 48
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2632
பாசுரம்
எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
அமைத்திருந்தோம் அஃதன்றே யாமாறு,-அமைப் பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
கொன்றானை யேமனத்துக் கொண்டு?
பெரிய திருவந்தாதி 49
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2633
பாசுரம்
கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து.
பெரிய திருவந்தாதி 50
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2634
பாசுரம்
பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம்?