Responsive image

பெரிய_திருவந்தாதி

பெரிய திருவந்தாதி 31

பாசுர எண்: 2615

பாசுரம்
அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு.

பெரிய திருவந்தாதி 32

பாசுர எண்: 2616

பாசுரம்
தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?

பெரிய திருவந்தாதி 33

பாசுர எண்: 2617

பாசுரம்
யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,-யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
பாறுபா றாக்கினான் பால்.

பெரிய திருவந்தாதி 34

பாசுர எண்: 2618

பாசுரம்
பாலாழி நீகிடக்கும் பண்பை, யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
சோதியாய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும்,
நீதியாய். நிற்சார்ந்து நின்று.

பெரிய திருவந்தாதி 35

பாசுர எண்: 2619

பாசுரம்
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்?

பெரிய திருவந்தாதி 36

பாசுர எண்: 2620

பாசுரம்
அவனாம் இவனாம் உவனாம், மற் றும்பர்
வனாம் அவனென் றிராதே,-அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
அவனே எவனேலும் ஆம்.

பெரிய திருவந்தாதி 37

பாசுர எண்: 2621

பாசுரம்
ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை.

பெரிய திருவந்தாதி 38

பாசுர எண்: 2622

பாசுரம்
அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
இமைக்கும் பொழுதும் இடைச்சி-குமைத்திறங்கள்,
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,
பேசியே போக்காய் பிழை.

பெரிய திருவந்தாதி 39

பாசுர எண்: 2623

பாசுரம்
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு?

பெரிய திருவந்தாதி 40

பாசுர எண்: 2624

பாசுரம்
வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி.

Enter a number between 1 and 4000.