பெரிய_திருவந்தாதி
பெரிய திருவந்தாதி 11
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2595
பாசுரம்
நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ.
பெரிய திருவந்தாதி 12
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2596
பாசுரம்
நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு.
பெரிய திருவந்தாதி 13
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2597
பாசுரம்
வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.-இழபுண்டே,
எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்?
பெரிய திருவந்தாதி 14
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2598
பாசுரம்
சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து.
பெரிய திருவந்தாதி 15
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2599
பாசுரம்
பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.
பெரிய திருவந்தாதி 16
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2600
பாசுரம்
சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து.
பெரிய திருவந்தாதி 17
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2601
பாசுரம்
சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,
தாள்வரைவில் லேந்தினார் தாம்.
பெரிய திருவந்தாதி 18
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2602
பாசுரம்
தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு?
பெரிய திருவந்தாதி 19
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2603
பாசுரம்
சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண்.
பெரிய திருவந்தாதி 20
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2604
பாசுரம்
காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று.