நான்முகன்_திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி 41
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2422
பாசுரம்
காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர, பேணி
வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று. 41
நான்முகன் திருவந்தாதி 42
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2423
பாசுரம்
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42
நான்முகன் திருவந்தாதி 43
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2424
பாசுரம்
மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு. 43
நான்முகன் திருவந்தாதி 44
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2425
பாசுரம்
கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து. 44
நான்முகன் திருவந்தாதி 45
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2426
பாசுரம்
புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப, - தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45
நான்முகன் திருவந்தாதி 46
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2427
பாசுரம்
வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று. 46
நான்முகன் திருவந்தாதி 47
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2428
பாசுரம்
நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம்.
நான்முகன் திருவந்தாதி 48
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2429
பாசுரம்
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை. 48
நான்முகன் திருவந்தாதி 49
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2430
பாசுரம்
மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று. 49
நான்முகன் திருவந்தாதி 50
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2431
பாசுரம்
கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. 50