நான்முகன்_திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி 31
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2412
பாசுரம்
மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை 31
நான்முகன் திருவந்தாதி 32
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2413
பாசுரம்
கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப் பொருள்தான்
வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி 32
நான்முகன் திருவந்தாதி 33
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2414
பாசுரம்
அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு. 33
நான்முகன் திருவந்தாதி 34
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2415
பாசுரம்
குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள்
நான்முகன் திருவந்தாதி 35
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2416
பாசுரம்
தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை? 35
நான்முகன் திருவந்தாதி 36
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2417
பாசுரம்
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான். 36
நான்முகன் திருவந்தாதி 37
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2418
பாசுரம்
வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு. 37
நான்முகன் திருவந்தாதி 38
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2419
பாசுரம்
அகைப்பில் மனிசரை யாறு சமயம்
புகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், - உகைக்குமேல்
எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்,
அப்போ தொழியும் அழைப்பு. 38
நான்முகன் திருவந்தாதி 39
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2420
பாசுரம்
அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு. 39
நான்முகன் திருவந்தாதி 40
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2421
பாசுரம்
வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற
_ல்வலையில் பட்டிருந்த _லாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண். 40