நான்முகன்_திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி 91
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2472
பாசுரம்
தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று 91
நான்முகன் திருவந்தாதி 92
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2473
பாசுரம்
என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு. 92
நான்முகன் திருவந்தாதி 93
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2474
பாசுரம்
காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93
நான்முகன் திருவந்தாதி 94
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2475
பாசுரம்
மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று. 94
நான்முகன் திருவந்தாதி 95
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2476
பாசுரம்
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை
இடநாடு காண இனி. (2) 95
நான்முகன் திருவந்தாதி 96
அருளியவர்: திருமழிசையாழ்வார்
நான்முகன்_திருவந்தாதி
பாசுர எண்: 2477
பாசுரம்
இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை, - இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான். (2) 96