Responsive image

நாச்சியார்_திருமொழி

நாச்சியார் திருமொழி 11

பாசுர எண்: 514

பாசுரம்
நாமமாயிர மேத்தநின்ற
      நாராயணாநர னே,உன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா
      லெமக்குவாதை தவிருமே,
காமன்போதரு காலமென்றுபங்
      குனிநாள்கடை பாரித்தோம்,
தீமைசெய்யும் சிரீதரா.எங்கள்
      சிற்றில்வந்து சிதையேலே. 1

நாச்சியார் திருமொழி 12

பாசுர எண்: 515

பாசுரம்
இன்றுமுற்றும் முதுகுநோவ
      இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
      ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
      மேல்துயின்றவெம் மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக்
      கம்மெழாததெம் பாவமே. 2

நாச்சியார் திருமொழி 13

பாசுர எண்: 516

பாசுரம்
குண்டுநீருறை கோளரீ.மத
      யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
      கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
      கைகளால்சிர மப்பட்டோ ம்,
தெண்டிரைக்கடற் பள்ளியாய்.எங்கள்
      சிற்றில்வந்து சிதையேலே. 3

நாச்சியார் திருமொழி 14

பாசுர எண்: 517

பாசுரம்
பெய்யுமாமுகில் போல்வண்ணா.உன்றன்,
      பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
      மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
      நோவநாங்களு ரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
      சிற்றில்வந்து சிதையேலே. 4

நாச்சியார் திருமொழி 15

பாசுர எண்: 518

பாசுரம்
வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
      விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல
      மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
      உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா. கேசவா.உன்
      முகத்தனகண்க ளல்லவே. 5

நாச்சியார் திருமொழி 16

பாசுர எண்: 519

பாசுரம்
முற்றிலாதபிள் ளைகளோம்முலை
      போந்திலாதோமை, நாடொறும்
சிற்றில்மேலிட்டுக் கொண்டுநீசிறி
      துண்டுதிண்ணென நாமது
கற்றிலோம்,கட லையடைத்தரக்-
      கர்குலங்களை முற்றவும்
செற்று,இலங்கையைப் பூசலாக்கிய
      சேவகா.எம்மை வாதியேல். 6

நாச்சியார் திருமொழி 17

பாசுர எண்: 520

பாசுரம்
பேதநன்கறி வார்களோடிவை
      பேசினால்பெரி திஞ்சுவை,
யாதுமொன்றறி யாதபிள்ளைக
      ளோமைநீநலிந் தென்பயன்,
ஓதமாகடல் வண்ணா.உன்மண
      வாட்டிமாரொடு சூழறும்,
சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
      சிற்றில்வந்து சிதையேலே. 7

நாச்சியார் திருமொழி 18

பாசுர எண்: 521

பாசுரம்
வட்டவாய்ச்சிறு தூதையோடு
      சிறுசுளகும்மண லுங்கொண்டு,
இட்டமாவிளை யாடுவோங்களைச்
      சிற்றிலீடழித் தென்பயன்,
தொட்டுதைத்துநலி யேல்கண்டாய்சுடர்ச்
      சக்கரம்கையி லேந்தினாய்,
கட்டியும்கைத் தாலின்னாமை
      அறிதியேகடல் வண்ணனே. 8

நாச்சியார் திருமொழி 19

பாசுர எண்: 522

பாசுரம்
முற்றத்தூடு புகுந்துநின்முகங்
      காட்டிப்புன்முறு வல்செய்து,
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்
      கக்கடவையோ கோவிந்தா,
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
      நீண்டளந்துகொண் டாய்,எம்மைப்-
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்
      பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்? 9

நாச்சியார் திருமொழி 20

பாசுர எண்: 523

பாசுரம்
சீதைவாயமு தமுண்டாய்.எங்கள்
      சிற்றில்நீசிதை யேல். என்று,
வீதிவாய்விளை யாடுமாயர்
      சிறுமியர்மழ லைச்சொல்லை,
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி
      புத்தூர்மன்விட்டு சித்தன்றன்,
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை
      வின்றிவைகுந்தம் சேர்வரே. 10

Enter a number between 1 and 4000.