நாச்சியார்_திருமொழி
நாச்சியார் திருமொழி 141
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 644
பாசுரம்
வெளிய சங்கொன் றுடையானைப்
பீதக வாடை யுடையானை,
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே?-
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோ மே. 8
நாச்சியார் திருமொழி 142
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 645
பாசுரம்
நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி,
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே?-
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்மடிய,
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே கண்டோ மே. 9
நாச்சியார் திருமொழி 143
அருளியவர்: ஆண்டாள்
நாச்சியார்_திருமொழி
பாசுர எண்: 646
பாசுரம்
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்,
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்,
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே. 10