திருவிருத்தம்
திருவிருத்தம் 1
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2478
பாசுரம்
பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாயிமை யோர்தலைவா.
மெய்நின்று கேட்டரு ளாய்,அடியேன்செய்யும் விண்ணப்பமே. 1
திருவிருத்தம் 2
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2479
பாசுரம்
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே. 2
திருவிருத்தம் 3
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2480
பாசுரம்
குழல்கோ வலர்மடப் பாவையும் மண்மக ளும்திருவும்,
நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல் மீளுங்கொல், தண்ணந்துழாய்
அழல்போ லடும்சக்க ரத்தண்ணல் விண்ணோர் தொழக்கடவும்
தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின் போன தனிநெஞ்ச் கமே. 3
திருவிருத்தம் 4
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2481
பாசுரம்
தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது, தண்ணந்துழாய்க்
கினிநெஞ்ச் க மிங்குக் கவர்வது யாமிலம், நீநடுவே
முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத் தான்முடி சூடுதுழாய்ப்
பனிநஞ்ச மாருத மே,எம்ம தாவி பனிப்பியல்வே? 4
திருவிருத்தம் 5
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2482
பாசுரம்
பனிபியல் வாக வுடையதண் வாடை,இக் காலமிவ்வூர்
பனிபியல் வெல்லாம் தவிர்ந்தெரி வீசும், அந் தண்ணந்துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத்தி றத்துக்கொலாம்
பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு நான்று தடாவியதே? 5
திருவிருத்தம் 6
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2483
பாசுரம்
தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு,
கடாயின கொண்டொல்கும் வல்லியீ தேனும், அசுரர்மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்
நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே. 6
திருவிருத்தம் 7
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2484
பாசுரம்
ஞாலம் பனிப்பச் செரித்து,நன் நீரிட்டுக் கால்சிதைந்து
நீலவல் லேறு பொராநின்ற வான மிது,திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறுதண்பூங்
காலங்கொ லோவறி யேன்,வினை யாட்டியேன் காண்கின்றவே? 7
திருவிருத்தம் 8
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2485
பாசுரம்
காண்கின் றனகளும் கேட்கின் றனகளும் காணில்,இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின் றன,இதெல் லாமறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை வேங்கடத் தும்பர்நம்பும்
சேண்குன்றம் சென்று,பொருள்படைப் <பான்கற்ற திண்ணனவே. 8
திருவிருத்தம் 9
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2486
பாசுரம்
திண்பூஞ் சுடர்_தி நேமியஞ் செல்வர்,விண் ணாடனைய
வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்,இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுட ராடிவெண் முத்தரும்பி
வண்பூங் குவளை, மடமான் விழிக்கின்ற மாயிதழே. 9
திருவிருத்தம் 10
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2487
பாசுரம்
மாயோன் வடதிரு வேங்கட நாட,வல் லிக்கொடிகாள்.
நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி லீருரை யீர் _மது
வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடும்தொண்டை யோ, அறை யோவி தறிவரிதே. 10