Responsive image

திருமழிசையாழ்வார்

திருச்சந்த விருத்தம் 21

பாசுரம்
அரங்கனே.த ரங்கநீர்க
      லங்கவன்று குன்றுசூழ்,
மரங்கடேய மாநிலம்கு
      லுங்கமாசு ணம்சுலாய்,
நெருங்கநீ கடைந்தபோது
      நின்றசூர ரெஞ்செய்தார்,
குரங்கையா ளுகந்தவெந்தை.
      கூறுதேற வேறிதே. (21)

திருச்சந்த விருத்தம் 22

பாசுரம்
பண்டுமின்று மேலுமாயொர்
      பாலனாகி ஞாலமேழ்,
உண்டுமண்டி யாலிலைத்து
      யின்றவாதி தேவனே,
வண்டுகிண்டு தண்டுழாய
      லங்கலாய்.க லந்தசீர்ப்,
புண்டரீக பாவைசேரு
      மார்ப.பூமி நாதனே. (22)

திருச்சந்த விருத்தம் 23

பாசுரம்
வானிறத்தொர் சீயமாய்வ
      ளைந்தவாளெ யிற்றவன்,
ஊன்நிறத்து கிர்த்தலம
      ழுத்தினாய்.உ லாயசீர்,
நால்நிறத்த வேதநாவர்
      நல்லயோகி னால்வணங்கு,
பால்நிறக்க டல்கிடந்த
      பற்பநாப னல்லையே? (23)

திருச்சந்த விருத்தம் 24

பாசுரம்
கங்கைநீர்ப யந்தபாத
      பங்கயத்தெம் மண்ணலே,
அங்கையாழி சங்குதண்டு
      வில்லும்வாளு மேந்தினாய்,
சிங்கமாய தேவதேவ.
      தேனுலாவு மென்மலர்,
மங்கைமன்னி வாழுமார்ப.
      ஆழிமேனி மாயனே. (24)

திருச்சந்த விருத்தம் 25

பாசுரம்
வரத்தினில்சி ரத்தைமிக்க
      வாளெயிற்று மற்றவன்,
உரத்தினில்க ரத்தைவைத்து
      கிர்த்தலத்தை யூன்றினாய்,
இரத்தநீயி தென்னபொய்யி
      ரந்தமண்வ யிற்றுளே
கரத்தி,உன்க ருத்தையாவர்
      காணவல்லர் கண்ணனே. (25)

திருச்சந்த விருத்தம் 26

பாசுரம்
ஆணினோடு பெண்ணுமாகி
      யல்லவோடு நல்லவாய்,
ஊணொடோ சை யூறுமாகி
      யொன்றலாத மாயையாய்,
பூணிபேணு மாயனாகிப்
      பொய்யினோடு மெய்யுமாய்,
காணிபேணும் மாணியாய்க்க
      ரந்துசென்ற கள்வனே. (26)

திருச்சந்த விருத்தம் 27

பாசுரம்
விண்கடந்த சோதியாய்வி
      ளங்குஞான மூர்த்தியாய்,
பண்கடந்த தேசமேவு
      பாவநாச நாதனே,
எண்கடந்த யோகினோடி
      ரந்துசென்று மாணியாய்,
மண்கடந்த வண்ணம்நின்னை
      யார்மதிக்க வல்லரே? (27)

திருச்சந்த விருத்தம் 28

பாசுரம்
படைத்தபாரி டந்தளந்த
      துண்டுமிழ்ந்து பௌவநீர்,
படைத்தடைத்த திற்கிடந்து
      முன்கடைந்த பெற்றியோய்,
மிடைத்தமாலி மாலிமான்வி
      லங்குகால னூர்புக,
படைக்கலம் விடுத்தபல்ப
      டைத்தடக்கை மாயனே. (28)

திருச்சந்த விருத்தம் 29

பாசுரம்
கொண்டைகொண்ட கோதைமீது
      தேனுலாவு கூனிகூன்,
உண்டைகொண்ட ரங்கவோட்டி
      யுள்மகிழ்ந்த நாதனூர்,
நண்டையுண்டு நாரைபேர
      வாளைபாய நீலமே,
அண்டைகொண்டு கெண்டைமேயு
      மந்தணீர ரங்கமே. (49)

திருச்சந்த விருத்தம் 30

பாசுரம்
வெண்டிரைக்க ருங்கடல்சி
      வந்துவேவ முன்னோர்நாள்,
திண்டிறல்சி லைக்கைவாளி
      விட்டவீரர் சேருமூர்,
எண்டிசைக்க ணங்களுமி
      றைஞ்சியாடு தீர்த்தநீர்,
வண்டிரைத்த சோலைவேலி
      மன்னுசீர ரங்கமே. (50)

Enter a number between 1 and 4000.