Responsive image

திருமழிசையாழ்வார்

திருச்சந்த விருத்தம் 11

பாசுரம்
சொல்லினால்தொ டர்ச்சிநீ
      சொலப்படும்பொ ருளும்நீ,
சொல்லினால்சொ லப்படாது
      தோன்றுகின்ற சோதிநீ,
சொல்லினால்ப டைக்கநீப
      டைக்கவந்து தோன்றினார்,
சொல்லினால்சு ருங்கநின்கு
      ணங்கள் சொல்ல வல்லரே? (11)

திருச்சந்த விருத்தம் 12

பாசுரம்
உலகுதன்னை நீபடைத்தி
      யுள்ளொடுக்கி வைத்தி, மீண்-
டுலகுதன்னு ளேபிறத்தி
      யோரிடத்தை யல்லையால்
உலகுநின்னொ டொன்றிநிற்க
      வேறுநிற்றி யாதலால்,
உலகில்நின்னை யுள்ளசூழல்
      யாவருள்ளா வல்லரே? (12)

திருச்சந்த விருத்தம் 13

பாசுரம்
இன்னையென்று சொல்லலாவ
      தில்லையாதும் இட்டிடைப்
பின்னைகேள்வ னென்பருன்பி
      ணக்குணர்ந்த பெற்றியோர்
பின்னையாய கோலமோடு
      பேருமூரு மாதியும்,
நின்னையார் நினைக்கவல்லர்
      நீர்மையால்நி னைக்கிலே. (13)

திருச்சந்த விருத்தம் 14

பாசுரம்
தூய்மையோக மாயினாய்து
      ழாயலங்கல் மாலையாய்,
ஆமையாகி யாழ்கடல்து
      யின்றவாதி தேவ,நின்
நாமதேய மின்னதென்ன
      வல்லமல்ல மாகிலும்,
சாமவேத கீதனாய
      சக்ரபாணி யல்லையே? (14)

திருச்சந்த விருத்தம் 15

பாசுரம்
அங்கமாறும் வேதநான்கு
      மாகிநின்ற வற்றுளே,
தங்குகின்ற தன்மையாய்த
      டங்கடல்ப ணத்தலை,
செங்கண்நாக ணைக்கிடந்த
      செல்வமல்கு சீரினாய்,
சங்கவண்ண மன்னமேனி
      சார்ங்கபாணி யல்லையே? (15)

திருச்சந்த விருத்தம் 16

பாசுரம்
தலைக்கணத்து கள்குழம்பு
      சாதிசோதி தோற்றாமாய்,
நிலைக்கணங்கள் காணவந்து
      நிற்றியேலும் நீடிருங்,
கலைக்கணங்கள் சொற்பொருள்க
      ருத்தினால்நி னைக்கொணா,
மலைக்கணங்கள் போலுணர்த்தும்
      மாட்சிநின்றன் மாட்சியே. (16)

திருச்சந்த விருத்தம் 17

பாசுரம்
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி
      நாலுமூர்த்தி நன்மைசேர்,
போகமூர்த்தி புண்ணியத்தின்
      மூர்த்தியெண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய்ந
      லங்கடல்கி டந்து,மேல்
ஆகமூர்த்தி யாயவண்ண
      மெங்கொலாதி தேவனே. (17)

திருச்சந்த விருத்தம் 18

பாசுரம்
விடத்தவாயொ ராயிரமி
      ராயிரம்கண் வெந்தழல்,
விடத்துவீழ்வி லாதபோகம்
      மிக்கசோதி தொக்கசீர்,
தொடுத்துமேல்வி தானமாய
      பௌவநீர ராவணை
படுத்தபாயல் பள்ளிகொள்வ
      தென்கொல்வேலை வண்ணாணே. (18)

திருச்சந்த விருத்தம் 19

பாசுரம்
புள்ளாதாகி வேதநான்கு
      மோதினாய்அ தன்றியும்,
புள்ளின்வாய்பி ளந்துபுட்கொ
      டிப்பிடித்த பின்னரும்,
புள்ளையூர்தி யாதலால
      தென்கொல்மின்கொள் நேமியாய்,
புள்ளின்மெய்ப்ப கைக்கடல்கி
      டத்தல்காத லித்ததே. (19)

திருச்சந்த விருத்தம் 20

பாசுரம்
கூசமொன்று மின்றிமாசு
      ணம்படுத்து வேலைநீர்,
பேசநின்ற தேவர்வந்து
      பாடமுன்கி டந்ததும்,
பாசம்நின்ற நீரில்வாழு
      மாமையான கேசவா,
ஏசவன்று நீகிடந்த
      வாறுகூறு தேறவே. (20)

Enter a number between 1 and 4000.