திருமழிசையாழ்வார்
திருச்சந்த விருத்தம் 1
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 752
பாசுரம்
பூநிலாய வைந்துமாய்ப்
புனற்கண்நின்ற நான்குமாய்,
தீநிலாய மூன்றுமாய்ச்
சிறந்தகா லிரண்டுமாய்,
மீநிலாய தொன்றுமாகி
வேறுவேறு தன்மையாய்,
நீநிலாய வண்ணநின்னை
யார்நினைக்க வல்லரே? (1)
திருச்சந்த விருத்தம் 2
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 753
பாசுரம்
ஐந்துமைந்து மைந்துமாகி
யல்லவற்று ளாயுமாய்,
ஐந்துமூன்று மொன்றுமாகி
நின்றவாதி தேவனே,
ஐந்துமைந்து மைந்துமாகி
யந்தரத்த ணைந்துநின்று,
ஐந்துமைந்து மாயநின்னை
யாவர்காண வல்லரே? (3)
திருச்சந்த விருத்தம் 4
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 755
பாசுரம்
மூன்றுமுப்ப தாறினோடொ
ரைந்துமைந்து மைந்துமாய்,
மூன்றுமூர்த்தி யாகிமூன்று
மூன்றுமூன்று மூன்றுமாய,
தோன்றுசோதி மூன்றுமாய்த்
துளக்கமில் விளக்கமாய்,
ஏன்றெனாவி யுள்புகுந்த
தென்கொலோவெம் மீசனே. (4)
திருச்சந்த விருத்தம் 5
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 756
பாசுரம்
நின்றியங்கு மொன்றலாவு
ருக்கடோ றும் ஆவியாய்,
ஒன்றியுள்க லந்துநின்ற
நின்னதன்மை யின்னதென்று,
என்றும்யார்க்கு மெண்ணிறந்த
ஆதியாய்நின் னுந்திவாய்,
அன்றுநான்மு கற்பயந்த
வாதிதேவ னல்லையே? (5)
திருச்சந்த விருத்தம் 6
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 757
பாசுரம்
நாகமேந்து மேருவெற்பை
நாகமேந்து மண்ணினை,
நாகமேந்து மாகமாக
மாகமேந்து வார்புனல்,
மாகமேந்து மங்குல்தீயொர்
வாயுவைந் தமைந்துகாத்து,
ஏகமேந்தி நின்றநீர்மை,
நின்கணேயி யன்றதெ. (6)
திருச்சந்த விருத்தம் 7
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 758
பாசுரம்
ஒன்றிரண்டு மூர்த்தியா
யுறக்கமோடு ணர்ச்சியாய்,
ஒன்றிரண்டு காலமாகி
வேலைஞால மாயினாய்,
ஒன்றிரண்டு தீயுமாகி
யாயனாய மாயனே
ஒன்றிரண்டு கண்ணினுனு
முன்னையேத்த வல்லனே? (7)
திருச்சந்த விருத்தம் 8
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 759
பாசுரம்
ஆதியான வானவர்க்கு
மண்டமாய வப்புறத்து,
ஆதியான வானவர்க்கு
மாதியான வாதிநீ,
ஆதியான வானவாண
ரந்தகாலம் நீயுரைத்தி,
ஆதியான காலநின்னை
யாவர்காண வல்லரே? (8)
திருச்சந்த விருத்தம் 9
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 760
பாசுரம்
தாதுலாவு கொன்றைமாலை
துன்னுசெஞ்ச டைச்சிவன்,
நீதியால்வ ணங்குபாத
நின்மலா.நி லாயசீர்
வேதவாணர் கீதவேள்வி
நீதியான வேள்வியார்,
நீதியால் வணங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே (9)
திருச்சந்த விருத்தம் 10
அருளியவர்: திருமழிசையாழ்வார்
திருச்சந்த_விருத்தம்
பாசுர எண்: 761
பாசுரம்
தன்னுளேதி ரைத்தெழும்
தரங்கவெண்த டங்கடல்
தன்னுளேதி ரைத்தெழுந்
தடங்குகின்ற தன்மைபோல்,
நின்னுளேபி றந்திறந்து
நிற்பவும் திரிபவும்,
நின்னுளேய டங்குகின்ற
நீர்மைநின்கண் நின்றதே (10)