Responsive image

திருச்சந்த_விருத்தம்

திருச்சந்த விருத்தம் 41

பாசுரம்
ஆயனாகி யாயர்மங்கை
      வேயதோள்வி ரும்பினாய்,
ஆய.நின்னை யாவர்வல்ல
      ரம்பரத்தொ டிம்பராய்,
மாய.மாய மாயைகொல்அ
      தன்றிநீவ குத்தலும்,
மாயமாய மாக்கினாயுன்
      மாயமுற்று மாயமே. (41)

திருச்சந்த விருத்தம் 42

பாசுரம்
வேறிசைந்த செக்கர்மேனி
      நீரணிந்த புஞ்சடை,
கீறுதிங்கள் வைத்தவன்கை
      வைத்தவன்க பால்மிசை,
ஊறுசெங்கு ருதியால்நி
      றைத்தகார ணந்தனை
ஏறுசென்ற டர்த்தவீச.
      பேசுகூச மின்றியே. (42)

திருச்சந்த விருத்தம் 43

பாசுரம்
வெஞ்சினத்த வேழவெண்ம
      ருப்பொசித்து உருத்தமா,
கஞ்சனைக்க டிந்துமண்ண
      ளந்துகொண்ட காலனே,
வஞ்சனத்து வந்தபேய்ச்சி
      யாவிபாலுள் வாங்கினாய்,
அஞ்சனத்த வண்ணானாய
      ஆதிதேவ னல்லையே? (43)

திருச்சந்த விருத்தம் 44

பாசுரம்
பாலினீர்மை செம்பொனீர்மை
      பாசியின்ப சும்புறம்,
போலுநீர்மை பொற்புடைத்த
      டத்துவண்டு விண்டுலாம்,
நீலநீர்மை யென்றிவைநி
      றைந்தகாலம் நான்குமாய்,
மாலினீர்மை வையகம்ம
      றைத்ததென்ன நீர்மையே? (44)

திருச்சந்த விருத்தம் 45

பாசுரம்
மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல்
      மண்ணுளேம யங்கிநின்று,
எண்ணுமெண்ண கப்படாய்கொல்
      என்னமாயை, நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல்அ -
      னந்தன்மேல்கி டந்தவெம்
புண்ணியா,பு னந்துழாய
      லங்கலம்பு னிதனே. (45)

திருச்சந்த விருத்தம் 46

பாசுரம்
தோடுபெற்ற தண்டுழாய
      லங்கலாடு சென்னியாய்,
கோடுபற்றி ஆழியேந்தி
      அஞ்சிறைப்புள் ளூர்தியால்,
நாடுபெற்ற நன்மைநண்ண
      மில்லையேனும் நாயினேன்,
வீடுபெற்றி றப்பொடும்பி
      றப்பறுக்கு மாசொலே. (46)

திருச்சந்த விருத்தம் 47

பாசுரம்
காரொடொத்த மேனிநங்கள்
      கண்ண. விண்ணிண் நாதனே,
நீரிடத்த ராவணைக்கி
      டத்தியென்பர் அன்றியும்
ஓரிடத்தை யல்லையெல்லை
      யில்லையென்ப ராதலால்,
சேர்விடத்தை நாயினேன்
      தெரிந்திறைஞ்சு மாசொலே. (47)

திருச்சந்த விருத்தம் 48

பாசுரம்
குன்றில்நின்று வானிருந்து
      நீள்கடல்கி டந்து,மண்
ஒன்றுசென்ற தொன்றையுண்ட
      தொன்றிடந்து பன்றியாய்,
நன்றுசென்ற நாளவற்றுள்
      நல்லுயிர்ப டைத்தவர்க்கு,
அன்றுதேவ மைத்தளித்த
      ஆதிதேவ னல்லயே? (48)

திருச்சந்த விருத்தம் 49

திருச்சந்த விருத்தம் 50

Enter a number between 1 and 4000.