இரண்டாம்_திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி 1
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2182
பாசுரம்
அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான். (2) 1
இரண்டாம் திருவந்தாதி 2
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2183
பாசுரம்
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நாங்கள்
பணியமரர் கோமான் பரிசு? 2
இரண்டாம் திருவந்தாதி 3
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2184
பாசுரம்
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர். 3
இரண்டாம் திருவந்தாதி 4
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2185
பாசுரம்
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி. 4
இரண்டாம் திருவந்தாதி 5
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2186
பாசுரம்
அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய், - படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
ஆரோத வல்லார் அறிந்து? 5
இரண்டாம் திருவந்தாதி 6
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2187
பாசுரம்
அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
காரோத வண்ணன் கழல். 6
இரண்டாம் திருவந்தாதி 7
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2188
பாசுரம்
கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே. உகந்து. 7
இரண்டாம் திருவந்தாதி 8
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2189
பாசுரம்
உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
அலைபண்பா லானமையால் அன்று. 8
இரண்டாம் திருவந்தாதி 9
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2190
பாசுரம்
அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,
நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,
பெருமுறையா லெய்துமோ பேர்த்து? 9
இரண்டாம் திருவந்தாதி 10
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2191
பாசுரம்
பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து
காத்தனை புல்லுயிரும் காவலனே, ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை. 10