Songs
இரண்டாம் திருவந்தாதி 27
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2208
பாசுரம்
பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம். 27
இரண்டாம் திருவந்தாதி 28
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2209
பாசுரம்
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன். 28
இரண்டாம் திருவந்தாதி 29
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2210
பாசுரம்
மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
அகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ. 29
இரண்டாம் திருவந்தாதி 3
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2184
பாசுரம்
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர். 3
இரண்டாம் திருவந்தாதி 30
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2211
பாசுரம்
நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,
நீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,
பேரோத மேனிப் பிரான். 30
இரண்டாம் திருவந்தாதி 31
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2212
பாசுரம்
பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு, - வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31
இரண்டாம் திருவந்தாதி 32
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2213
பாசுரம்
மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32
இரண்டாம் திருவந்தாதி 33
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2214
பாசுரம்
துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
வாய்திறங்கள் சொல்லும் வகை. 33
இரண்டாம் திருவந்தாதி 34
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2215
பாசுரம்
வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலாரால் முன்னே, - மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி. 34
இரண்டாம் திருவந்தாதி 35
அருளியவர்: பூதத்தாழ்வார்
இரண்டாம்_திருவந்தாதி
பாசுர எண்: 2216
பாசுரம்
இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது. 35